யூடியூப் கொண்டு வந்துள்ளபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

by Staff / 15-07-2025 10:52:05am
யூடியூப் கொண்டு வந்துள்ளபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

யூடியூப் மூலமாக ஏராளமானவர்கள் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பணத்தை அள்ளிவருகின்றனர்.இதை. பல்வேறு தவறுகள் நடப்பதாக கூறப்படுகிறது.இதனை தடுக்கும் விதமாகவும் பார்வையாளர்களுக்கு தரமான தகவல்களை கொடுக்கும் வண்ணமும் யூடியூப்  புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

யூடியூப் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலில். மீண்டும் பதிவேற்றம், குறைந்த தரம், செயற்கை நுண்ணறிவு வீடியோக்களுக்கு வருமானம் இல்லை. அசல் உள்ளடக்கத்துக்கு மட்டுமே வருவாய் வழங்கப்படும்.

யூடியூப்பில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோக்கள், குறைந்த தரம் கொண்ட வீடியோக்களுக்கு இனி வருமானம் வழங்குவதை யூடியூப் கடினமாக்கியுள்ளது.

அசல் உள்ளடக்கத்துடன் புதிதாக உருவாக்கும் படைப்புகளுக்கு மட்டுமே வருவாய் வழங்கப்படும் என்றும் அந்த வீடியோக்கள் மட்டுமே அதிகம் விளம்பரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களும் வருமான வரம்பில் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், யூடியூப்பில் வருமானம் ஈட்ட தகுதி பெறுவதற்கான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆயிரம் சப்ஸ்கிரைபர்களுடன், 12 மாதங்களில் 4,000 பொதுப்பார்வை மணி நேரம் அல்லது 90 நாட்களில் ஒரு கோடி ஷார்ட்ஸ் பார்வையாளர்கள் கொண்டவர்களே யூடியூப்-ல் வருமானத்திற்கு தகுதியாக முடியும் என்ற கட்டுப்பாடு அப்படியே தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசலான படைப்புகளை உருவாக்குபவர்களை பாதுகாக்கும் விதமாக யூடியூப் கொண்டு வந்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

 

Tags : யூடியூப் கொண்டு வந்துள்ளபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.

Share via