திருமண நிகழ்ச்சியில் ரவுடி கும்பல் தலைவன் சுட்டுக் கொலை

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவுடி கும்பல் தலைவன் மற்றொரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டான். பஞ்சாபைச் சேர்ந்தவரும், கனேடிய காவல்துறையினரால் மிகவும் ஆபத்தான கேங்க்ஸ்டர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டவருமான அமர்பிரீத் சாம்ரா (28) சுட்டுக் கொல்லப்பட்டார். வான்கூவர் நகரில் ஒரு திருமண நிகழ்வின் போது அடையாளம் தெரியாத கும்பல் அமர்ப்ரீத்தை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது அங்கு 60 பேர் இருந்தனர். சுடப்பட்ட உடனேயே தரையில் விழுந்த அமர்பிரீத்துக்கு, அந்த இடத்தில் இருந்த ரோந்து அதிகாரிகள் சிபிஆர் கொடுத்தனர். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
Tags :