ஈரோட்டில் இரண்டு காவலர்களுக்குள் மோதல் வாக்கி டாக்கி உடைப்பு.

by Editor / 15-12-2022 09:51:04pm
ஈரோட்டில் இரண்டு காவலர்களுக்குள் மோதல்  வாக்கி டாக்கி உடைப்பு.

ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.. இவர் குமாரபாளையத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது... இவருக்கு கருங்கல்பாளையம் காவல் நிலைய குற்ற தடுப்பு பிரிவு தலைமை காவலராக பணியாற்றிய கல்யாண சுந்தரம் என்பவர் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.. சுரேஷும் கல்யாண சுந்தரமும் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட பழக்கத்தில் சுரேஷ் கடன் வாங்குவதற்கு கல்யாணசுந்தரம் சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரிவர கடனை செலுத்தாத சுரேஷுக்கும் கல்யாண சுந்தரத்துக்கும் இடையே இதனால் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடன் பெற்ற நிறுவனத்திற்கு சுரேஷும் கல்யாணசுந்தரமும் சென்றனர்.அந்த  நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறில் கல்யாணசுந்தரம் சீருடை மற்றும் வாக்கி டாக்கியுடன் வந்திருந்த சுரேஷை தாக்கியும் அவரிடம் இருந்த வாக்கி டாக்கி யை தூக்கி எறிந்துள்ளார்...
உடனடியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்த நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.... விசாரணை செய்த மாவட்ட எஸ்பி சசிமோகன் இத்தகைய ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட கல்யாணசுந்தரம்,சுரேஷ்ஆகிய இரண்டு காவலர்களையும் பணிஇடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

ஏற்கனவே கருங்கல்பாளையம் குற்றத் தடுப்பு தலைமை காவலர் கல்யாண சுந்தரத்தின் மீது கஞ்சா மற்றும் குட்கா  வியாபாரிகளிடம்லஞ்சம் வாங்கியது, புகார் தர வருபவர்களின் மீது வழக்குப்பதிவது, தொடர்பாக இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது முறையாக கல்யாணசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via