புதுச்சேரியில் என்ட்ரியை உறுதி செய்த கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கதிர்காமம், காந்தி அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு 3 நாட்கள் உரிய கொரோனா சிகிச்சை எடுத்துக்கொண்டாலே நோய் குணமாகிவிடும் என ரவிச்சந்திரன் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags :