அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவு:

by Staff / 21-04-2022 01:14:09pm
அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவு:

இங்கிலாந்து கோர்ட்டு நடவடிக்கை
அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட அசாஞ்சேவை, நாடு கடத்த இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. எனினும் இதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான முறையான உத்தரவை இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு நேற்று பிறப்பித்தது. எனினும் அவரை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீத்தி படேலிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via