கோயில் கணக்காளர் மீது ஆசிட் ஊற்றிய 2 அர்ச்சகர்கள்

ஹைதராபாத்தில், கோயில் வளாகத்தில் வைத்து கோயில் ஊழியர் மீது ஆசிட் ஊற்றிய வழக்கில், அர்ச்சகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூலட்சுமி மாதா கோயிலில் கணக்காளராகப் பணியாற்றிவரும் நரசிங்க ராவ் தலை மீது ஹோலி பண்டிகையன்று மர்ம நபர் ஒருவர் ஆசிடை ஊற்றிவிட்டு தப்பியோடினார். நரசிங்க ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அர்ச்சகர் ராஜசேகர் சர்மாவையும், அவருக்கு உதவியதாக மற்றொரு அர்ச்சகர் ஹரிநாத சர்மாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tags :