குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

by Editor / 15-01-2025 10:28:42am
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான குற்றாலம் பகுதியில் கடந்த 20 தினங்களாக மழை இல்லாத நிலை நீடித்து வந்த நிலையில் அருவியில் நீர்வரத்தும் குறைந்தது இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக திடீரென சாரல் மழை வனப்பகுதியில் இரவு நேரங்களில் பெய்ததின் காரணமாக குற்றாலம் பிரதான அறிவியல் நீர்வரத்து சற்று அதிகரித்தது மேலும் கடந்த இரண்டு தினங்களாக குற்றால அருவிகளில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடித்துவிட்டு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் அருவியில் நீராடுவதற்கு இன்று காலை முதல் திரண்டு வந்ததின் காரணமாக குற்றால அருவிப்பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் தொடர் விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது அருவிக்கரை எங்கும் மக்கள் கூட்டமே அதிகரித்துள்ளது. என் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Tags : குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

Share via