முன்னால் அமைச்சர் ஜெ யக்குமார் கைது

by Admin / 22-02-2022 12:35:15am
முன்னால் அமைச்சர் ஜெ யக்குமார் கைது

 


சனிக்கிழமை நடந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் ,சென்னை ராயபுரத்திலுள்ள 49வது வார்டில்
திமுக உறுப்பினர் ஒருவர் கள்ள ஓட்டு போடவந்ததாகக்கூறி..அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ெஜயக்குமார்
தம் கட்சித்தொண்டர்களுடன் வந்து அவரை அரை நிர்வாணப்படுத்தி,சட்டையால் பின் புறமாக வைத்து கைகளைக்கட்டி
ரோட்டில் இழுத்து வந்த வீடியோ  அரசியல் பிரமுகர்களிடம் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.இந்நிலையில் ,முன்னாள் அமைச்சர் ெஜயக்குமார்உட் பட 40க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாக கூடி கலகம் விளைவித்தல்,
கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் தண்டையார் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்குத்தொடர்பாகத் திங்கள் கிழமை இரவு முன்னாள் அமைச்சரை அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர்
கைது செய்து,எழும்பூர் நீதிமன்றத்தில் அஜர்படுத்த உள்ளதாக தகவல்.இந்நிலையில் ,முன்னால் அமைச்சர் ெஜயக்குமாரின் மகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நுங்கம்பாக்க காவல்நிலைய எதரில் ரோட்டில் அமர்ந்து
மறியல் செய்தார்.

 

Tags :

Share via

More stories