தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக அரசு பேருந்துகளில் ஏற்றி கைது செய்தது..

by Staff / 14-08-2025 09:00:08am
 தூய்மைப் பணியாளர்களை  காவல்துறை  குண்டுக்கட்டாக அரசு பேருந்துகளில் ஏற்றி கைது செய்தது..

சென்னையில் 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை தமிழக காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்துள்ளது. நேற்று ஆக.13 மாலை அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு உள்ளிட்ட அரசுத் தரப்பு குழு, போராட்டக்குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, போராட்டத்தை தொடர்வோம் என போராட்டக்குழு அறிவித்தது. இந்நிலையில், நள்ளிரவில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறை குண்டுக்கட்டாக அரசு பேருந்துகளில் ஏற்றி கைது செய்துள்ளது.

 

Tags : தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக அரசு பேருந்துகளில் ஏற்றி கைது செய்தது..

Share via