குற்றாலம் மெயின் அருவியில் வலம் வந்த கட்டு வீரியன் வகை பாம்பு... 

by Editor / 12-09-2024 10:21:50pm
குற்றாலம் மெயின் அருவியில் வலம் வந்த கட்டு வீரியன் வகை பாம்பு... 

குற்றாலம் மெயின் அருவியில் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அருவியின் தடாகம் வழியாக ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கும் பகுதிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள கட்டு விரியன் வகையை சார்ந்த பாம்பை கண்டதும் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து கொண்டு  ஓட்டினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததும் தென்காசி உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் விரைந்து அருவிப்பகுதிக்கு வந்து பாம்பை  லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துச் சென்றனர்.இந்தபாம்பு கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ஏற்கனவே சிலதினங்களுக்குமுன்னர் மலைப்பாம்பு ஓன்று கார்பார்க்கிங் கட்டணம் வசூல்செய்யும்பகுதியில் உலாவந்த நிலையில் இப்போது கடும்விஷம் கொண்ட பாம்பு பிடிப்பட்டுள்ளது.

 

Tags : குற்றாலம் மெயின் அருவியில் வலம் வந்த கட்டு வீரியன் வகை பாம்பு... 

Share via