கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலிக்கு முதலமைச்சர் வாழ்த்து

by Staff / 02-12-2023 12:44:12pm
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலிக்கு முதலமைச்சர் வாழ்த்து

செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'மகத்தான வாழ்த்துக்கள், வைஷாலி. 2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்தது. செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி-சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். நீங்கள் இப்போது முதல் கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகளாக பெருமை சேர்த்துள்ளனர். உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இது நம் மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாகவும் இருக்கிறது' என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories