ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

by Staff / 04-11-2022 02:56:34pm
ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை கட்சி தலைமை அறிவித்துள்ளது.இசுதன் காத்வி குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
குஜராத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடக்கிறது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படும்.

 

Tags :

Share via