கோவிட்டுடன் பரவும் குளிர்காய்ச்சல் மருத்துவமனையில் பெரும்பாலானோர் அனுமதி

by Editor / 19-08-2022 01:12:54pm
கோவிட்டுடன்  பரவும் குளிர்காய்ச்சல் மருத்துவமனையில் பெரும்பாலானோர் அனுமதி

குளிர் காய்ச்சல் போன்ற நோய்கள் வேகமாக பரவி வரும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெரும்பாலோருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீத வீடுகளில் கோவிட்  அல்லது ப்ளூ காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களான காசியாபாத் குருகிராம் நொய்ட உள்ளிட்ட இடங்களில் சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக  டெல்லியில் கோவிட்  இருமடங்காக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories