அதிமுகவுடன் கூட்டணி கிடையாது..அண்ணாமலை அதிரடி

by Staff / 06-06-2024 03:55:48pm
அதிமுகவுடன் கூட்டணி கிடையாது..அண்ணாமலை அதிரடி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் பேட்டி அளித்த போது, “2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி கிடையாது. அக்கட்சியின் தலைவர்களை கோவையில் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர். நான் பாஜக மாநில தலைவராக இருக்கும் வரையில் அதிமுக உடன் கூட்டணி இல்லை” என திட்டவட்டமாக கூறினார்.

 

Tags :

Share via