100 அடி தூரம் வேதாரண்யத்தில் கடல் உள்வாங்கியது.

by Editor / 23-12-2023 11:05:16am
 100 அடி தூரம்  வேதாரண்யத்தில் கடல் உள்வாங்கியது.

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் மழை ஓய்ந்த நிலையில் பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடல் காலை முதல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது.கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்களும், பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், அலைகள் எதுவும் இன்றி கடல் அமைதியாக காணப்பட்டது. கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.கடல் உள்வாங்கி சேறும், சகதியுமாக காணப்படும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் காற்று அதிகமாக வீசினால் அலைகள் எழுந்தவுடன் கடல் ஓரத்தில் உள்ள சேறு கரைந்து சீராகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

 

Tags : 100 அடி தூரம்

Share via