ரயில் நிலையத்தில் வட மாநில சிறுமி மீட்பு
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை பொதுமக்கள் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.அப்போது அங்கே 13 வயது சிறுமி ஒருவர் தனியாக எங்கு செல்வது என்று தவித்துக் கொண்டிருந்தார்.இதை பார்த்தநடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் டேவிட் மற்றும் பொதுமக்கள் அந்த சிறுமியிடம் நீ யார் எங்கிருந்து வந்தாய் கேட்டறிந்தனர்
அப்போது அந்த சிறுமி தன்னுடைய பெயர் லலிதா என்றும் தனக்கு வயது 13 என்றும் நாகலாந்து மாநிலம் ஹிமாபுரில் தான் வசிப்பதாகவும் தனது பெற்றோர் ஹலாலுதீன் மற்றும் தாயுடன் ஏற்பட்ட கோபம் காரணமாக தனியாக நாகலாந்து மாநிலத்தில் இருந்து ரயில் ஏறி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பல மாநிலங்கள் வழியாக ரயிலில் பயணம் செய்து தற்போது இந்த ரயில் நிலையத்தில் வந்து தவிப்பதாக கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.மேலும் அவரது தந்தையின் செல்போன் நம்பரை வாங்கி அவரது தந்தையிடம் அவரது மகள் தூத்துக்குடி யில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Tags :