கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 4,500.

by Editor / 18-03-2024 09:36:05am
கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 4,500.

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு ஒரு கிராம் தங்கத்திற்கு 4,200 கடனாக இதுவரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது தங்க நகைகளின் மதிப்பு அதிகரித்து வருவதால் கூட்டுறவு துறை நகை கடன் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்திற்கு 4,500 கூட்டுறவு வங்கிகளில் கடனாக வழங்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. இது கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

 

Tags : கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 4,500.

Share via

More stories