இ.பி.எஸ், கவர்னர் ஆர்.என்.ரவியுடன்.. மத்திய அமைச்சர் முருகன், அண்ணாமலை திடீர் சந்திப்பு

by Editor / 18-09-2021 12:06:21pm
இ.பி.எஸ், கவர்னர் ஆர்.என்.ரவியுடன்.. மத்திய அமைச்சர் முருகன், அண்ணாமலை திடீர் சந்திப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கலும் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் வருகின்றன.திமுக கூட்டணியை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திப்பதாக பாமக விலகிச் சென்று விட்டது. பாஜக-அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அ.தி.மு.க.வில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக ஏற்கனவே தயாராகி வருகிறது.செங்கல்பட்டுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்துக்கு சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.விற்கு கணிசமான இடங்களை வழங்க வேண்டும் என்று இருவரும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் உலா வருகின்றன.இந்த சந்திப்பு முடிந்தவுடன் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவியை கவர்னர் மாளிகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்கள். ஆர்.என்.ரவி நாளை கவர்னராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தாக கூறப்படுகின்றன. 

 

Tags :

Share via