திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழா.

by Editor / 17-09-2024 07:32:40pm
திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழா.


சென்னையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் AI தொழில்நுட்பத்தில் கலைஞர் கருணாநிதி உரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கலைஞர் உரையாற்றினார். ஸ்டாலின் திமுகவை கம்பீரமாக ஆட்சி பொறுப்பில் அமர வைத்துள்ளார். ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு என கலைஞர் உரையாற்றினார். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின் அருகில் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

திமுக பவள விழாவும்முப்பெரும் விழாவும் இன்று சென்னை ஒய் எம் சி ஏ கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. அண்ணா பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோன்றிய நாள் என மூன்றை விழாவையும் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் திமுக சார்பில்  முப்பெரும் விழா கொண்டாடப்படும் இந்த ஆண்டு பவள விழா ஆண்டு அதாவது 75 ஆவது ஆண்டு என்பதனால் மூன்றையும் மிகப் பிரமாண்ட முறையில் முப்பெரும் விழாவாக திமுக கழகம் கொண்டாடுகிறது இவ்விழா பொதுச் செயலாளர் க.துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது. பெரியார் விருதை பாப்பமாலுக்கும் அண்ணா விருது அறந்தாங்கி நிஷா இராமநாதனுக்கும் கலைஞர் விருது ஜெகத்ரட்சகனுக்கும் பாவேந்தர் விருது கவிஞர்தமிழரசனுக்கு பேராசிரியர் விருதை வி பி ராஜனுக்கும் மு க ஸ்டாலின் விருது எஸ் எஸ் பழனி மாணிக்கத்திற்கும் முதலமைச்சர் வழக்குகிறார். கட்சியில் சிறப்பாக தொண்டாற்றிய ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் முடிப்பும் வழங்கப்படுகிறது. 75 அடி உயர கட்சி கொடியையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்றுகிறார். மிகப் பிரம்மாண்ட முறையில் இவ்விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

Tags : திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழா.

Share via