கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது வழக்கு

by Editor / 25-09-2021 04:51:20pm
கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது வழக்கு



கோவை தொண்டாமுத்தூரில் நிலப்பிரச்சனை தொடர்பான புகாரில், பிரபல ஃபார்மூலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனது நிலத்திற்குச் செல்லும் பாதையை நரேன் கார்த்திகேயன் மறித்து தடுப்பு ஏற்படுத்தியதாக, பிரித்வி ராஜ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல்துறையினர், இந்நடவடிக்கையை மேற்கொண்டனர். இதே விவகாரத்தில், நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பிரித்வி ராஜ்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலப்பிரச்சனை தொடர்பான இந்த வழக்கு விசாரணை, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories