கிரிக்கெட் மட்டையால் இளைஞரை அடித்த போலீஸ்

by Staff / 15-12-2022 12:28:02pm
கிரிக்கெட் மட்டையால் இளைஞரை அடித்த போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த கொடூரம் நடந்துள்ளது. நொய்டா செக்டார் 142 காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் இரண்டு காவலர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.வலியால் வாலிபர் மயங்கி விழுந்தார். அந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பழையதாக இருக்கலாம் என்றும், ஆனால் காவல்துறையின் அடாவடித்தனம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.உ.பி.யில் போலீஸ் காவலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதற்கு இந்த வீடியோ ஆதாரம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories