எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..
திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உட்பட 90 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சேலம், சூரமங்கலத்தில் திமுக அரசுக்கு எதிராக, திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உட்பட 90 பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கொரோனா விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதேபோல் சேலத்தில் 19 இடங்களிலும் மற்ற மாவட்டங்களில் 78 இடங்களிலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட 7 ஆயிரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :



















