மணற்கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய சீமான் வலியுறுத்தல்

பழனி ஆயக்குடியில் கிராம நிர்வாக அலுவலரைக் கொலை செய்ய முயன்ற திமுக மணற்கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை மணற்கொள்ளையர்கள் வாகனம் ஏற்றி படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் நேர்மையான அரசு அதிகாரிகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. திமுக அரசு இனியாவது மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்குத் துணைபோவதைக் கைவிட்டு, மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags :