அரசு மீது நம்பிக்கை இல்லை; முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், செல்லம்பட்டி பகுதியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது உதயகுமார் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவமழை காலம், இந்த காலத்தில் பெருமழை, பெருவெள்ளம், சூறைகாற்று, புயல் காற்று வீசும். கடந்த ஆண்டு எதிர்கட்சி தலைவர் எடுத்து சொல்லியும் கூட நாங்கள் எத்தனை மில்லிமீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வீர வசனம் பேசினார்கள், ஆனால் சென்னை மூழ்கி போனதை பார்த்தோம், தூத்துக்குடி, திருநெல்வேலியில் பாதிப்பு ஏற்பட்டது.
இப்போது இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் எல்லோரும், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிற்கிற காட்சியை ஊடகம் மூலம் பார்க்க முடிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது இந்த அரசின் மீது நம்பிக்கை போய் விட்டது. பேச்சளவிலேயே தான் இருப்பார்களே தவிர செயல் அளவில் இல்லை என்று கூறினார்.
Tags :