டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய புகாரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முதுகு வலி காரணமாக நேற்று சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறை வார்டில் சேர்க்கப்பட்டார். இந்த சூழலில் டிடிஎப் வாசனுக்கு காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் தர மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.
Tags :