இன்று டாக்டர்கள் தினம் ; பிற்பகல் 3 மணிக்குமோடி உரை

by Editor / 01-07-2021 08:22:31am
இன்று டாக்டர்கள் தினம் ; பிற்பகல் 3 மணிக்குமோடி உரை

புகழ்பெற்ற டாக்டரும், மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சருமான பிதன் சந்திர ராயின் நினைவாக ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பிதன் சந்திர ராய் பிறந்த, மறைந்த தினம் ஜூலை 1 ஆகும். டாக்டர்கள் தினத்தையொட்டி டாக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசுகிறார். அது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து டாக்டர்களின் பணியில் இந்தியா பெருமைப்படுகிறது.
ஜூலை 1-ம் தேதி தேசிய டாக்டர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு, இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் டாக்டர்கள் சமூகத்துடன் நான் பேசுகிறேன் என அவரது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது கொரோனா பேரிடர் காலங்களில் அயராது உழைக்கு மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். மேலும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் என கூறினார்.

 

Tags :

Share via