தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் சல்பியூரிக் ஆசிட் பயன்படுத்தி அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்டது.
சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கன்னிகை பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21 அன்று அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆளை நிர்வாகத்தின் சேமிப்பு கிடங்கு மற்றும் குழாய்களில் தேங்கியிருந்த அம்மோனியா வாயு மற்றும் கழிவுகள் சல்பியூரிக் ஆசிட் பயன்படுத்தி அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட அம்மோனியா வாயு டேங்கர் இறால்கள் மூலமாக ஓசூரில் உள்ள அதன் விநியோக நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. இப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை சென்னை பெட்ரோலிய நிறுவனம் மணலி உரல் தொழிற்சாலை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
Tags :


















