இன்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவு!

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20,000 மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். படகுகளில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் ஐஸ் கட்டிகளை ஏற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
Tags : இன்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவு!