திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தை மர்ம நபர்கள் சூறையாடியது தொடர்பான அவரது பதிவில், திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. திமுகவின் 4 ஆண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது என கூறியுள்ளார்.
Tags :