கள்ளத்தொடர்பு காரணமாக பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து ஊர்வலம்.

குஜராத்: தாஹோத்தில் பழங்குடியின பெண்ணை ஆடைகளை அவிழ்த்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 35 வயது பெண், வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெண் வீட்டார் அவரது ஆடைகளை அவிழ்த்து கைகளை சங்கிலியால் கட்டி ஊர்வலமாக கிராமம் முழுக்க இழுத்துச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : கள்ளத்தொடர்பு காரணமாக பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து ஊர்வலம்.