செல்போன் விளையாட்டால் விபரீதம்... தாய் தட்டிக்கேட்டதால் ஆற்றில் விழுந்த 16 வயது சிறுவன்...

by Admin / 05-08-2021 03:46:41pm
செல்போன் விளையாட்டால் விபரீதம்... தாய் தட்டிக்கேட்டதால் ஆற்றில் விழுந்த 16 வயது சிறுவன்...



கும்பகோணத்தில் செல்போன் விளையாடியதை தாய்  தட்டிக்கேட்ட மகன் ஆற்றில் விழுந்து சாவு.
 
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிசைநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன் மகன் பார்த்திபன் வயது 16. பார்த்திபன் கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் 4 ந் தேதி காலை அவரது தாய் பார்த்திபனிடம், செல்போன் கேம் விளையாட்டால், சரியாக படிக்கவில்லை என திட்டி, கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பார்த்திபன் 4ந் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

 பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை வீட்டின் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து  திருவிடைமருதூர் போலீசார்,  பார்த்திபன் தனது தாய் ஆற்றில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo