தப்புத் தப்பாய் தமிழை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் ரயில்வே நிர்வாகம்.

by Editor / 19-02-2024 12:16:33am
தப்புத் தப்பாய் தமிழை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் ரயில்வே நிர்வாகம்.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டை மயிலாடுதுறை, பயணிகள் ரயில் செங்கோட்டை திருநெல்வேலி ஈரோடு பயணிகள் ரயில், செங்கோட்டை திருநெல்வேலி பயணிகள் ரயில், செங்கோட்டை சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை மதுரை பயணிகள் ரயில், மற்றும் செங்கோட்டை தாம்பரம் வாரம் மூன்று நாள் இயக்கப்படும் ரயில், கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயில், மற்றும் குருவாயூர் மதுரை பயணிகள் ரயில், மதுரை குருவாயூர் பயணிகள் ரயில், திருநெல்வேலி- பாலக்காடு- திருநெல்வேலி விரைவு ரயில், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி-  எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியின் மூலமாக தினமும் மாலை.3.30 மணிக்கு மதுரையில்  இருந்து வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலுக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொழுது அந்த ரயிலின் செல்லும் வழித்தடங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதில் புனலூர் என்று அறிவித்துவிட்டு அதற்கு அடுத்தார் போல் கொல்லம் என்று அறிவிப்பதற்கு பதில் குலாம் என்று தமிழை தப்பு..தப்பாய் அந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது. மேலும் பிற ஊர்கள் முறைப்படி சொல்லப்பட்டாலும் கொல்லத்திற்கு கொலாம் என்று அறிவிக்கப்படுவதால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர். இரு மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பெரிய ரயில் நிலையமாக இருக்கும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் அறிவிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட அந்த அறிவிப்பு குழப்பமாக இருப்பதால் இதனை உடனடியாக தென்னக ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அந்த குரல் விளக்கத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : தப்புத் தப்பாய் தமிழை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் ரயில்வே நிர்வாகம்.

Share via