இசையமைப்பாளர் கங்கை அமரன்-தீனா மோதல்

by Admin / 18-02-2024 06:30:14pm
 இசையமைப்பாளர் கங்கை அமரன்-தீனா மோதல்

 சங்கம் என்றாலே பிரச்சனைக்குரியதாக தான் இருக்கும் போலிருக்கிறது திரை துறையில் பல்வேறு சங்கங்கள் உள்ளன.  அவற்றுள் ஒன்றுதான் இசை சார்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் சங்கம். மிக தொன்மையான இந்த சங்கம் .பீ .பி.சீனிவாசனால்  உருவாக்கப்பட்டது.

நலிந்த இசைக் கலைஞர்களுக்கு உதவும் பொருட்டும் நல உதவிகளை செய்வதற்காகவும் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் இசையமைப்பாளர் தீனா தலைவராக இரண்டு முறை, அதாவது இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உடைய இந்த பொறுப்பில் அவர் நான்கு வருடமாக இருந்து வருவதாகவும் அதன் காரணமாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஆதனால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா புதியவர்களுக்கு வழியிட வேண்டும் என்று சொல்லி ஒரு ஆடியோ வெளியிட்டு இருந்த நிலையில், கங்கை அமரன் நேரடியாக செய்தியாளர்கள் முன்பு தீனாவை பற்றி மிக தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்தார்.

பல்வேறு சங்க உறுப்பினர்களின் உடைய கையெழுத்தை போலியாக இட்டு பண மோசடி ஈடுபட்டிருப்பதாகவும் உயிரோடு இல்லாத பவதாரணினுடைய  கையெழுத்தையும் போட்டு பணம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கங்கை அமரன் தீனா விடையே மூண்டியிருக்கும் இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்காமல் சமரசமாக பேசி தீர்ப்பார்கள் என்று சங்க உறுப்பினர்கள் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.

.குற்றச்சாட்டிற்கு தீனா தேர்தல் வாக்குப்பதிவின் பொழுது அவர் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கினார். 660 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில் அவர்களுக்கான உதவிகளை முதல் முறை தன்னால் அளிக்க முடியவில்லை என்றும் இரண்டாவது முறை வந்த பொழுது அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவ முடிந்ததாகவும் அதனை தொடர்ச்சியாக செய்யவே இந்த முறையும் தேர்தலில் நிற்பதாகவும் முறைகேடு என்பது எதுவும் இல்லை .அதற்கான உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவித்த பின்பு தான் தேர்தல் நடைபெறுவதாகவும் சொன்னார் .அடுத்த முறை தான் தேர்தலில் நிற்காமல் மற்றவர்கள் போட்டியிட வழி செய்வதாகவும் சொன்னார்.. தீனாவும் கங்கை அமரனும் பா.ஜ.க.வில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 இசையமைப்பாளர் கங்கை அமரன்-தீனா மோதல்
 

Tags :

Share via