நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

by Admin / 19-06-2024 10:31:28am
நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2010 இல் வெளியான மைனா படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் மலையாள படமான நீலத்தாமரா என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான நிலையில் ,வேலையில்லாத பட்டதாரி, தெய்வத்திருமகன் ,முப்பொழுதும் உன் கற்பனை, நாயக், ரன் பேபி ரன், வி.ஐ.பி, பசங்க 2 ,ராட்சசன், ஆடு ஜீவிதம் என பல்வேறு படங்களில் நடித்துள்ள அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜய் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2017 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று... பின்னர் ஜெகத் தேசாய் என்பவரை கைபிடித்தார். அவரோடு வாழ்ந்த இல்லற வாழ்க்கையில் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக ஜனவரியில் தகவலை வெளியிட்டார். இந்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .இது குறித்து மகிழ்ச்சியோடு அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் காணொளி காட்சிகளை வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.. 32 வயதான அமலாபால் கேரளாவைச் சேர்ந்தவர்..

நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
 

Tags :

Share via