ஒரே பாலின திருமணம்: மத்திய அரசு முடிவு

ஒரே பாலின திருமணம் தொடர்பான மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தற்போது, ஒரே பாலின தம்பதியினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக மேத்தா கூறுகையில், ஒரே பாலின திருமணம் தொடர்பாக மனுதாரர்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். இதில் உள்ள பிரச்சனைகள், குழப்பங்களை தீர்க்க முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Tags :