பழ வியாபாரியை தீ வைத்து எரித்த வாலிபர் கைது
நாகர்கோவில் அருகே வடக்குச் சூரங்குடி தட்டான் விளை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் நாகர்கோ வில் ராமன்புதூர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று புன்னைநகரை சேர்ந்த நவீன் குமார், தட்டான்விளையை சேர்ந்த சஞ்சய் (23) ஆகியோர் தங்களுக்கு பழம் வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த இருவரும், பிரேம்ஆனந்த் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த பிரேம் ஆனந்த் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆனந்த் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். நவீன் குமார், சஞ்சய் இருவர் மீதும் கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சஞ்சயை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். இதை தொடர்ந்து போலீ சார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள நவீன்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்
Tags :