கேரள த்தில் மே 30வரை,  கர்நாடகத்தில் ஜூன் 7வரை ஊரடங்கு நீட்டிப்பு 

by Editor / 22-05-2021 04:47:37pm
கேரள த்தில் மே 30வரை,  கர்நாடகத்தில் ஜூன் 7வரை ஊரடங்கு நீட்டிப்பு 


 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.கேரளாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்று நாட்டில் பரவிய துவக்க காலத்தில் தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளா, தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
கேரளாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக கேரள மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 23-ந் தேதியோடு முடிவடைகிறது.இந்நிலையில், கேரள மாநிலத்தில் மே 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 
அந்த வகையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திரிசூர் ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால், அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த 3 அடுக்கு ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாகவும், மலப்புரம் மாவட்டத்தில் 3 அடுக்கு ஊரடங்கு தொடரும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
கர்நாடகா மாநிலத்தில் 
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மே 25ம் தேதி மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் உள்ளடக்கிய வாகனங்கள் வழக்கம்போல் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக  மாநிலத்தில் ஜூன் 07-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா  அறிவித்துள்ளார்.  மேலும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயாள் பாதிக்கப்படுவோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via