ஜப்பான் பிரதமர் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகை

இன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.கடந்த வருடம் 2022 மார்ச்மாதத்தில் நடந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்திக்க இருப்பதால் இவ்வரவு முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஜப்பான் ஜி 7 பதவியையும் இந்தியா ஜி20 பதவியையும் வகிப்பதால் இந்தோ-பசிபிக் திட்டங்கள் குறித்த பேச்சும் அதிகரித்து வரும் உலகளாவிய சவால்களைத்தீர்ப்பதற்கான முயற்சியிலும் பாதுகாப்பு,வர்த்தகம்,சுகாதாரம்,கல்வி குறித்த ,தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள் பேசப்படலாம் என்கிற தகவல்கள் வெளி வந்துள்ளநிலையில் ஜப்பான் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கமும் உறுதி செய்கின்றன.
Tags :