திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகாதேரோட்டம்.

by Editor / 04-10-2022 09:03:30am
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகாதேரோட்டம்.

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப
மகாதேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27 ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் 
கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பெரிய சேஷ வாகனம், சிறிய சேஷ வாகனம், ஹம்ச அன்னப்பறவை வாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், மோகினி அவதாரம், பல்லக்கு வாகனம் ஆகியவற்றில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில்  ஏழுமலையானின் மகா தேர்ப் பவனி  வந்தது. அப்போது தேரில் , ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் பவனி வந்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா...கோவிந்தா... என கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து மலையப்ப சாமியை வழிபட்டனர். 

பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவு இறுதி வாகன சேவையான குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

 

Tags :

Share via