முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 07-02-2023 06:42:54pm
முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் நெய்யாற்றங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உம்மன் சாண்டியை சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேரில் சென்று நலம் விசாரித்தார். முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில், வீணா ஜார்ஜ் காலையில் மருத்துவமனைக்குச் சென்று உம்மன்சாண்டியை சந்தித்தார். உம்மன்சாண்டியின் மகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் பேசியதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via

More stories