மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறுமா

by Staff / 27-01-2023 05:07:02pm
மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறுமா

இப்போது மக்களவை தேர்தல் நடந்தால் எந்த கட்சி ஆட்சிக்கு வரும்? பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என அகில இந்திய ஊடகங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மோடி தலைமையிலான பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி பாஜக 284 இடங்களைப் பெறலாம். எனினும், காங்கிரஸின் இடங்கள் 191 ஆக அதிகரிக்கக்கூடும் என்று சர்வே சுட்டிக்காட்டுகிறது. நாடு முழுவதும் 72 சதவிகித மக்கள் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via