தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் பணியாளர்களுக்கு திருநெல்வேலி மண்டலம் எச்சரிக்கை .

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி கழக அலுவலகம் தங்கள் பணியாளர்கள் நாளை மறுநாள் நடைபெறும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மண்டலம் தெரிவித்துள்ள அறிக்கையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளது.
எனவே, ஆகஸ்ட் 3-ஆம் தேதி எந்த விடுப்பும் தரப்படாது என்றும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. பணிக்கு வருகை தராத பணியாளர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டாலும், போராட்டம் செய்ய தூண்டினாலும் அவர்கள் மீது சட்ட விரோத போராட்டத்தில் ஈடுபட்டதாக கருதப்பட்டு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : Tirunelveli zone warning for trade union strike strike workers.