நீதி வேண்டிநடந்த ஆர்ப்பாட்டத்தில் 5 நிமிடத்தில் தனது உரையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்ட விஜய்.
போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 பேரின் மரணத்துக்கும் நீதி வேண்டியும் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் இன்று (ஜூலை 13) தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சித்தார். 5 நிமிடம் பேசிய விஜய், அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அவர் மக்கள் கூட்டம் இல்லாததே அவர் கிளம்பிச்சென்றதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 1500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், கடும் வெயில் காரணமாக பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகிலுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Tags : Vijay finished his speech in 5 minutes at the protest demanding justice and left for home.



















