இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்.

by Admin / 06-10-2024 12:21:20am
இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்.

 

சுற்றுச்சூழல், பாதுகாப்பு வாழ்வியல் முறை, மனித சக்தி ஆற்றல் இவற்றின் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கோடு தமிழக விளையாட்டு ஆணையமும் தனியார் நிறுவனமும் சேர்ந்து நடத்தும் சைக்ளோதான்- 2024 போட்டி இன்று காலை 4.30 மணி தொடங்கி காலை 9 மணி வரை நிகழ இருப்பதால், கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை தொடங்கி கோவளம்- மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பு வரை இப் போட்டி நடைபெறுவதால் வாகனங்கள் பழைய மாமல்லபுரம் சாலை- செங்கல்பட்டு தேசிய சாலையில் திருப்பி விடப்படுகிறது..

 

Tags :

Share via