கொரோனா லேகியம் விற்ற நபரை தட்டி தூக்கிய போலிஸார்!
ஆந்திராவில் கொரோனாவை குணப்படுத்த மருந்து விற்பனை செய்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யா தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லுார் மாவட்டம் கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான ஆனந்தய்யா கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை தயாரித்து அதை விற்பனை செய்து வந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்தனர். அதிலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளும் மருந்து வாங்க வந்தது பெரும் கொடுமை. இதனால் அவர் மருந்து விற்கும் பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மருந்து விநியோகத்தை நிறுத்தி , அதை சோதனைக்காக விஜயவாடாவில் உள்ள ஆயுஷ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைத்தார் . ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி , உத்தரவின்படி மருந்து வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது . ஆனந்தயாவிடம் இருந்த மருந்துகள் , மருந்து தயாரிக்கும் பொருட்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன . அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் . வரும் 24 ஆம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் குழு , கிருஷ்ணபட்டணம் சென்று ஆனந்தய்யாவின் மருந்து தயாரிப்பை நேரடியாக பார்வையிட உள்ளது
Tags :