கொடைக்கானல் காட்டு யானை நடமாட்டத்தால் சுற்றுலாப்பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரியில் குட்டியுடன் காட்டு யானை இன்று அதிகாலை வேளையில் நடமாடி வந்ததால் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் சுற்றுலா தலப்பகுதிகளுக்கு செல்ல தடைவிதிக்கபட்டுள்ளதாகவும்,மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடருமென வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :