சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாப பலி

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்நேர்ந்தவர் அமிர்தம். இவர் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூஜை அறையில் குத்துவிளக்கு, சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென குத்துவிளக்கில் இருந்த தீ அவரது சேலையில் பிடித்தது. உடல் முழுவதும் காயம் அடைந்த அவரை தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags :