எம்.எல்.ஏ ராஜினாமா! மம்தா பானர்ஜி போட்டி

by Editor / 22-05-2021 08:16:01am
எம்.எல்.ஏ ராஜினாமா! மம்தா பானர்ஜி போட்டி

மேற்குவங்க சட்டப் பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால், கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

எனினும், ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி பெற்றதால் மீண்டும் முதல்வராக மம்தா பதவியேற்றார். அவர் முதல்வராகத் தொடர 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ.வாக வேண்டும். எனவே, பபானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிட வசதியாக அத்தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஷோபன்தேவ் சட்டோபாத்யாய் நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாயிடம் அளித்தார். அப்போது கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான பார்த்தா சட்டர்ஜி உடனிருந்தார். ஷோபன்தேவ் ராஜினாமா செய்ததால் காலியாகும் பபானிபூர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே, கடந்த 2 சட்டப் பேரவைத் தேர்தல்களில் பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via