அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சிப்பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளர்கள் வந்த வண்ணம் இருப்பதால் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 காவல் - உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு.



















