பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சிக்கும் ப.சிதம்பரம் - அமித்ஷா

பாகிஸ்தானை காப்பாற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சிக்கிறார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என ப.சிதம்பரம் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, "ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர முயற்சிக்கிறார். ஆபரேஷன் மகாதேவ் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக தோன்றுகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :